/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் மோடி கூட்டத்தில் திரளாக பங்கேற்க முடிவு
/
பிரதமர் மோடி கூட்டத்தில் திரளாக பங்கேற்க முடிவு
ADDED : ஏப் 07, 2024 11:39 PM
அன்னூர்;பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில், அன்னூர் வட்டாரத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகன், கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை ஆகியோரை ஆதரித்து, பிரதமர் மோடி வரும் 10ம் தேதி மதியம் 1:00 மணிக்கு, மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி நால் ரோட்டில், நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், அன்னூர் பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது. வட்டாரத் தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார்.
அன்னூர் வடக்கு ஒன்றியத்தில் இருந்து வேன்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில், 1,000 பேர் பிரதமர் மோடியின் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபால், ஒன்றிய பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நகரத் தலைவர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய தலைவர் ரத்தினசாமி தலைமையில் கணேசபுரத்தில் நடந்தது. தெற்கு ஒன்றியத்திலிருந்து, 1,000 பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

