/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும்'
/
'தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும்'
'தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும்'
'தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும்'
ADDED : மார் 28, 2024 04:14 AM
கோவை : கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
சுதந்திரத்திற்கு பின் நடந்த முதல் தேர்தல், 1952-ல் காங்., கட்சியை சார்ந்தவர்தான் பிரதமராக வருவார் என அனைவருக்கும் தெரியும். அதுபோல் தற்போது மோடி தான் பிரதமராக வருவார் என, 148 கோடி மக்களுக்கும் தெரியும். 2ஜி ஏல விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கை, அமைச்சராக இருந்த ராஜா மிரட்டினார்.
இன்று பிரதமர் மோடியை, யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது. அந்த ஆண்டவனே இறங்கி வந்தால்தான் அவரை மிரட்டி, பணிய வைக்க இயலும். அது கூட அவர் பணிவாரா என்பது தெரியவில்லை.
வெப்பம், காற்று, ஒலி மாசு அதிகமாகிவிட்டது. தொலைநோக்கு பார்வையில்லாத ஆட்சியாளர்களால், கோவை எங்கே செல்கிறது என தெரியவில்லை.
மக்கள் தொலைநோக்கு பார்வையுடன், இத்தேர்தலை அணுக வேண்டும். பிரதமரின் அனைத்து திட்டங்களும் கோவைக்கு வர வேண்டும். போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டும். மத்தியில் ஆட்சி அமைத்தபின், 45 நாட்களில் போதை பொருள் தடுப்பு அலுவலகம் அமைக்கப்படும்.
நம் உரிமையை போராடி பெற்றுத்தருவோரே நமக்கு தேவை. வலியுறுத்த தேவையில்லை. அயோத்திக்கான ரயில் சேவை நிரந்தரமாக்கப்படும்.
150 நாட்களில் நொய்யலை சீர்படுத்துவோம். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் என்ன செய்வோம் என்பதை, புத்தகமாக ஒரு வாரத்தில் அனைவருக்கும் வழங்குவோம். மாற்றம், வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைவரும் செயல்பட வேண்டும், இவ்வாறு, அவர் பேசினார். கட்சி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

