/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படாது: மேலாளர் அறிக்கை
/
பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படாது: மேலாளர் அறிக்கை
பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படாது: மேலாளர் அறிக்கை
பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படாது: மேலாளர் அறிக்கை
ADDED : மே 14, 2024 11:54 PM
பொள்ளாச்சி:'பாலக்காடு ரயில்வே கோட்டம் மூடப்படுவதாக வெளியான செய்தி ஆதாரமற்றவையாகும்,' என, பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீஅருண்குமார் சதுர்வேதி வெளியிட்ட அறிக்கை வருமாறு:
தெற்கு ரயில்வேயின், பாலக்காடு கோட்டம் மூடப்படுவதாக ஒரு சில ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை. அதில், எந்த உண்மையும் இல்லை.
தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தை மூடுவது அல்லது புதிய கோட்டத்தை நிறுவுவது குறித்து எந்த விவாதங்களும், முன்மொழிவுகளும் அல்லது திட்டங்கள் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறது. பாலக்காடு கோட்டத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை.
வதந்தியான தகவல்கள், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

