/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பணி சேவை குறைபாடு ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
/
கட்டுமான பணி சேவை குறைபாடு ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கட்டுமான பணி சேவை குறைபாடு ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
கட்டுமான பணி சேவை குறைபாடு ரூ.2 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
ADDED : ஏப் 02, 2024 11:45 PM
கோவை;கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் செய்த படி பணி முடிக்காமல், சேவை குறைபாடு செய்ததால், இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, கணபதி, மணியகாரம்பாளையம் ரோட்டை சேர்ந்த சுகந்தி, அவருக்கு சொந்தமான இடத்தில், 5,000 சதுர அடியில் வர்த்தக கட்டடம் கட்டுவதற்கு, ஜெயச்சந்திரன் இன்ஜினியர்ஸ் அண்ட் பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். கட்டுமான பணிக்கு, 40 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, 2021, ஆக., 12ல் ஐந்து லட்சம் ரூபாய் முன்தொகை வழங்கினார்.
இரண்டாம் கட்டமாக, 28.44 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கூடுதலாக பணம் பெற்றுக்கொண்டு, கட்டுமான பணியை, 100 நாட்களுக்கும் முடிக்காமல் பாதியில் நிறுத்தினர். 19 லட்சம் ரூபாய் மதிப்பில் மட்டுமே பணிகள் நடந்ததும், கூடுதலாக, 9.38 லட்சம் ரூபாய் பெற்றதும் தெரிய வந்தது.
கூடுதலாக பெற்ற தொகை மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில், சுகந்தி வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர்மனுதாரர்கள் ஒப்பந்தம் செய்த படி பணியை முடிக்காமல், சேவை குறைபாடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற தொகை, ரூ.9.38 லட்சத்தை திரும்ப கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, இரண்டு லட்சம் ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

