/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் பயன்பாட்டுக்கு நிழற்கூரை திறப்பு
/
மக்கள் பயன்பாட்டுக்கு நிழற்கூரை திறப்பு
ADDED : ஜூலை 13, 2024 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் புதியதாக கட்டப்பட்ட நிழற்கூரையை, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஆறு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.
இதையடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிழற் கூரையை திறந்து வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ண குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

