/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு
/
தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு
ADDED : மார் 30, 2024 12:45 AM

கோவை;இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை, நினைவுகூறும் வகையில் நேற்று தேவாலயங்களில் சிலுவை பாதை நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம், புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் தவக்காலம், கடந்த பிப்., 14ம் தேதி சாம்பல் புதன் அன்று துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடு நடந்தது.
நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு கோவையில், கார்மெல் நகர் கார்மெல் அன்னை ஆலயம், கோவைப்புதுார் குழந்தை இயேசு தேவாலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா, புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், டவுன்ஹால் புனித மிக்கேல் அதிதுாதர் தேவாலயம், போத்தனுார் சூசையப்பர் தேவாலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல் சோல்ஸ் சர்ச், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில், சிறப்பு வழிபாடு மற்றும் பெரிய சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது.
இதில், ஏராளமான கிறிஸ் தவர்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். இயேசுவின் சிலுவைபாடுகளை தத்ரூபமாக நடித்து காட்டும் நிகழ்வும் நடந்தது.
நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தேவாலயங்களில் இன்று நள்ளிரவு, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடக்கவுள்ளது.

