/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது; நடத்தியவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
/
அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது; நடத்தியவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது; நடத்தியவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது; நடத்தியவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு
ADDED : ஏப் 03, 2024 10:59 PM
கோவை : கோவையில் முறையான அனுமதியின்றி அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், எந்தவொரு விழா அல்லது கூட்டம் நடத்துவதாக இருந்தாலும், தேர்தல் பிரிவில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களாக இருப்பின், 'ஸ்வேதா' என்கிற செயலியில் பதிவு செய்தால் போதும்; உடனடியாக, ஆய்வு செய்து அனுமதி தரப்படும்.
அரசியல் சாராத நிகழ்வுகளாக இருப்பின், அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அப்பகுதிக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, தடையின்மை சான்று பெற்ற பிறகு அனுமதி தரப்படுகிறது.
ஆனால், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சார்பில் அனுமதி பெறாமலேயே பல இடங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தகவல் அறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், தேர்தல் பிரிவில் முறையான அனுமதி பெறாமல், அரசியல் சார்ந்த கூட்டங்கள் நடத்தியவர்களுக்கு, தேர்தல் ஆணையத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் சங்கங்களுக்கு, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.

