/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புது புத்தகம், புது சீருடை, -புது வகுப்பு! புது கல்வியாண்டுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

ADDED : ஜூன் 10, 2024 01:53 AM

கோவை;கோடை விடுமுறை முடிந்து, கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும், கடந்த ஏப்., 24 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பள்ளி விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம்.
இடையில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, ஜுன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிட இருந்ததால், ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என, மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அரசு அறிவித்தபடி, கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. புதிய சீருடைகள், புத்தகப்பை, புத்தகங்களுடன் மாணவர்கள் புதிய வகுப்புக்கு இன்று செல்கின்றனர்.
பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய மராமத்துப் பணிகள், பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள் சீர்படுத்துதல், சுற்றுப்புறங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.