/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யணும்!
/
மின் டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யணும்!
ADDED : ஏப் 03, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில், தனியார் மருத்துவமனை அருகே நீரோடைக்கு எதிர் திசையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் டிரான்ஸ்பார்மர் அருகே தீ பிடித்ததால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர்.
மேலும், மழை காலத்தில் டிரான்ஸ்பார்மர் பகுதியில் தண்ணீர் தேங்குவதால், மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டால் சீரமைக்கவும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

