sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய கராத்தே; கோவை வீரர்கள் தேர்வு

/

தேசிய கராத்தே; கோவை வீரர்கள் தேர்வு

தேசிய கராத்தே; கோவை வீரர்கள் தேர்வு

தேசிய கராத்தே; கோவை வீரர்கள் தேர்வு


ADDED : மே 08, 2024 12:25 AM

Google News

ADDED : மே 08, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க கோவையை சேர்ந்த 14 வீரர் - வீராங்கனையினர் தேர்வாகினர்.

தேசிய அளவிலான கராத்தே போட்டி உத்தரகாண்டில் நேற்று துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த மாதம் தமிழகத்தில் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோயம்புத்துார் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி அசோசியேஷன் சார்பில் 90 வீரர் - வீராங்கனையினர் பங்கேற்றனர். அதில் 14 பேர் தங்கம் வென்றனர்.

மாநில போட்டியில் தங்கம் வென்ற 14 வீரர் - வீராங்கனையினர் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கோயம்புத்துார் ஸ்போர்ட்ஸ் கராத்தே பள்ளி அசோசியேஷனின் பொதுக்குழு கூட்டத்தில் தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் - வீராங்கனையினர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கோயம்புத்துார் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் தலைவர் கார்த்திகேயன், பொது செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us