/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை
/
பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை
பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை
பெண்ணிடம் ரூ.74 லட்சம் மோசடி ஒருவர் கைது; மூவருக்கு வலை
ADDED : மே 22, 2024 05:33 AM

கோவை, : பெண்ணிடம், ரூ.74 லட்சம் மோசடி செய்த ஒருவரை, கைது செய்த போலீசார் மூவரை தேடி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த யோகேஷ் சந்தானம் மனைவி பிரதீபா, 42; சுயதொழில் செய்து வருகிறார்.
இவரது நண்பர் வாயிலாக சென்னையை சேர்ந்த தயாசேகர், ரவிச்சந்திரா, சரவணன், சந்திரமோகன் ஆகியோர் அறிமுகம் ஆகினர். கடந்தாண்டு ஜூன் மாதம், சந்திரமோகன் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். சிங்கப்பூர் அரசு உதவியுடன் புவி வெப்ப நிலையை குறைக்க, பணிகள் செய்வதாகவும் கூறினார்.
இதையடுத்து, கடந்தாண்டு ஆக., 5ம் தேதி சந்திரமோகன் நிறுவனத்தில், ரூ.74.10 லட்சத்தை பிரதீபா முதலீடு செய்தார். துபாயில் நடந்த தொழில் மாநாட்டில், புதிய திட்டத்திற்கான பணிகள் துவக்கப்படும் என, சந்திரமோகன் தெரிவித்தார். பிரதீபா அங்கு சென்ற போது, எந்த நிறுவனமும் துவங்கப்படவில்லை.
சந்திரமோகனிடம் கேட்ட போது பதில் அளிக்கவில்லை. முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்ட போதும் தரவில்லை. பிரதீபா, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கோவையை சேர்ந்த சரவணன், 37 என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற மூவரை தேடி வருகின்றனர்.

