/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டப்பட்டது எமதர்மராஜன் கோவில்: இன்று விழா இல்லை என அறிவிப்பு
/
பூட்டப்பட்டது எமதர்மராஜன் கோவில்: இன்று விழா இல்லை என அறிவிப்பு
பூட்டப்பட்டது எமதர்மராஜன் கோவில்: இன்று விழா இல்லை என அறிவிப்பு
பூட்டப்பட்டது எமதர்மராஜன் கோவில்: இன்று விழா இல்லை என அறிவிப்பு
ADDED : ஏப் 23, 2024 02:04 AM

போத்தனூர்;சித்திர புத்திர எமதர்மராஜன் கோவிலுக்கு சொந்தம் கொண்டாடி, வழக்கு போடப்பட்டதால், கோவில் பூட்டப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளலூர் அருகே நூற்றாண்டுகள் பழமையான எமதர்மராஜன் கோவில் உள்ளது. ஏழு குலத்தாருக்கு குலதெய்வமான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கும்.
முந்தைய நாள் முதலே மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவர். பவுர்ணமியன்று பொங்கல் வைத்து, எமதர்மராஜனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.
அத்தகைய சிறப்புமிக்க பழமையான கோவிலில், தனது குடும்பத்தினருக்கு சொந்தம் உள்ளதாக கூறி, கோவில் அருகே வசிக்கும் தர்மராஜ் என்பவர், கடந்தாண்டு கோயம்புத்தூர் மாவட்ட மூன்றாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு போட்டார். இது குறித்து கோவிலில், நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் கந்தவேல், கடந்த இரு வாரங்களுக்கு முன், கோவிலை பூட்டினார். கோவிலில் வழிபாடு தடைபட்டுள்ளது. இதனையறிந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவிலுக்கு சொந்தம் கொண்டாடுவது குறித்து தர்மராஜிடம் கேட்க பலமுறை மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது போன் ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதாக, வாய்ஸ் மெசேஜ் வருகிறது.
கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் தலைவர் கந்தவேலிடம் கேட்டபோது ஏழு குலத்தாருக்கு சொந்தமான இக்கோவில் அக்காலத்தில் தர்மராஜ் குடும்பத்தார் வாங்கிய நிலத்தின் நடுவே அமைந்துள்ளது. அதனால் இதனை தனக்கு சொந்தமானது எனக் கூறி, வழக்கு போட்டுள்ளார். ரசீது புத்தகம் அடித்து, வசூலில் ஈடுபட முயன்றார். பிரச்னை ஏற்பட்டதால், வக்கீலுடன் ஆலோசித்து கோவிலை பூட்டினோம். நாளை (இன்று) விழா நடப்பதற்கு சாத்தியமில்லை. அனைவரும் ஒத்துழைத்தால் கோவில் திறக்கப்படும் என்பதில் மாற்றமில்லை, என்றார்.

