/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் நாளை நடக்கிறது கும்பாபிஷேகம்
/
ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் நாளை நடக்கிறது கும்பாபிஷேகம்
ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் நாளை நடக்கிறது கும்பாபிஷேகம்
ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் நாளை நடக்கிறது கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 21, 2024 01:19 AM

மேட்டுப்பாளையம்:தாசம்பாளையத்தில் திருப்பணிகள் செய்த, அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையத்தில், அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. நேற்று மாலை, முளைப்பாரி ஊர்வலம், தாசம்பாளையம் ராமர் கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவிலுக்கு வந்தடைந்தது. இரவு வாஸ்து சாந்தி பூஜையும், பூர்ணாஹுதி சாற்று முறையும் நடைபெற்றது.
இன்று (21ம் தேதி) காலை, 8:00 மணிக்கு முதல் கால ஹோமங்கள், வேத பாராயணம், திவ்ய பிரபந்த சேவா காலம், சாற்று முறை ஆகியவை நடைபெற உள்ளன.
22ம் தேதி காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட உள்ளன. அதன் பின், கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தச தரிசனம், திருவாராதணம், வேத அலங்கார தரிசனம் ஆகியவை நடைபெற உள்ளன. மாலை ஆறு மணிக்கு கருட வாகனத்தில், பெருமாள் திருவீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.
காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி வேங்கடாத்ரி, வேதவியாச வெங்கடேச பட்டர் சாமிகள் ஆகியோர் கும்பாபிஷேக வைபவ பூஜைகளை செய்ய உள்ளனர்.

