/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரோதி ஆண்டில் விரோதிகளை ஒழிப்போம்; திருப்பூரில் கமல் பேச்சு
/
குரோதி ஆண்டில் விரோதிகளை ஒழிப்போம்; திருப்பூரில் கமல் பேச்சு
குரோதி ஆண்டில் விரோதிகளை ஒழிப்போம்; திருப்பூரில் கமல் பேச்சு
குரோதி ஆண்டில் விரோதிகளை ஒழிப்போம்; திருப்பூரில் கமல் பேச்சு
ADDED : ஏப் 15, 2024 12:46 AM

திருப்பூர்:'குரோதி ஆண்டில் விரோதிகளை நாம் ஒழிக்க வேண்டும் ,' என, திருப்பூர் வேன் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசினார்.
திருப்பூர், பாண்டியன் நகரில், இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, கமல் நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது:
குரோதி ஆண்டு பிறந்துள்ளது. இந்தாண்டில், விரோதிகளை நாம் ஒழிக்க வேண்டும். தமிழகம் காக்க தான் நான் ஓட்டுக் கேட்டு வந்துள்ளேன்.
வேட்பாளர் சுப்பராயன், 19 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 76 வயதாகியும், உண்மையான கம்யூ., தோழராக உள்ளார். இவரை போன்றவர்களை பார்த்து தான் நான் 'அன்பே சிவம்' படம் எடுத்தேன்; 'நல்லசிவம்' பாத்திரத்தையே உருவாக்கினேன். ஜனநாயகம் வேறு, கம்யூனிசம் வேறு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேறு பாதையில் ஒரு குறிக்கோள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நீங்கள் நம்பலாம். செய்வதாய் பொய் சொல்வதை நம்பக்கூடாது. கருணாநிதி சொன்னதை செய்தவர்; செய்ததை மட்டுமே சொல்பவர். திருப்பூர் மாநகராட்சியாவதற்கும், மாவட்டமாக தரம் உயர்வதற்கும் காரணமாக இருந்தார். தனக்கான வரைபடத்தை தானே வரைந்துகொண்டது திருப்பூர்.
பத்தாண்டுக்கு முன்பே 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதியை இலக்காக நிர்ணயித்திருந்தனர். ஜி.எஸ்.டி., - பண மதிப்பிழப்பால், திருப்பூர் பின்னோக்கிப்பயணிக்கிறது.
திருப்பூர் போன்று 75 தொழில் நகரங்களை உருவாக்குவதாக மத்திய அரசு உறுதியளிக்கிறது. ஆனால், உருவாகியுள்ள ஒரே நகரையே வளரவிடாமல் தடுத்துள்ளனர்.
இவ்வாறு, கமல் பேசினார்.

