/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஜயேந்திரரை சந்தித்த காமாட்சிபுரி ஆதினம்
/
விஜயேந்திரரை சந்தித்த காமாட்சிபுரி ஆதினம்
ADDED : ஏப் 05, 2024 11:11 PM

கோவை : கோவை காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து, ஆசி பெற்றார்.
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்ததை அடுத்து, இரண்டாம் பீடாதிபதியாக பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், காஞ்சி சங்கர மடம் சென்ற பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், ''காஞ்சி சங்கர மடம் சென்று காமாட்சி அம்மனை தரிசனம் செய்தும், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றும், குருநாதர் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகளின் விருப்பத்தை, பூர்த்தி செய்துள்ளேன். வெள்ளி ருத்ராட்சம் அணிவித்த சங்கராச்சாரியார், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் போன்று ஆன்மிகம், சமுதாய பணிகளில் முழுமையாக ஈடுபடுமாறு ஆசி வழங்கினார்,'' என்றார்.

