/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வந்தாச்சு! சரிபார்க்கும் பணி துவக்கம்
/
ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வந்தாச்சு! சரிபார்க்கும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வந்தாச்சு! சரிபார்க்கும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் வந்தாச்சு! சரிபார்க்கும் பணி துவக்கம்
ADDED : ஏப் 03, 2024 10:37 PM

உடுமலை, - உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும் தேர்தல் பொருட்கள் வரத்துவங்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, வரும், 19ம் தேதி நடைபெறுகிறது. பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
ஏற்கெனவே, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அடிப்படையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பேலட் யூனிட், 'விவிபேட்' ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன.
உடுமலை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து, சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 'புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி' 'தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்', ஓட்டுச்சாவடி அலுவலர் - 1, 2, 3; ஓட்டுச்சாவடிக்குள் செல்லும் வழி, வெளியேறும் வழிகளை குறிப்பிடும் பல்வேறு ஸ்டிக்கர்கள்.
வாக்காளர் பதிவு படிவம் (படிவம் 17 ஏ), ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான டைரி, பூத் ஏஜென்ட்களுக்கான பேட்ஜ், பென்சில், ஸ்கேல், கவர்கள், குண்டூசி உள்பட ஸ்டேஷனரி பொருட்கள்; நுால் கண்டு, ரப்பர் ஸ்டாம்ப், மாதிரி ஓட்டுப்பதிவு படிவங்கள், கையேடுகள், வாக்காளர் கைகளில் வைக்கப்படும் அழியாத மை.
ஓட்டுப்பதிவு செய்யும் இடத்தில் வைக்கப்படும் மறைவு அட்டை, ஓட்டுப்பதிவு முடிந்தபின் இ.வி.எம்., மெஷினில் வைக்கப்படும் பேப்பர் சீல், மெட்டல் சீல் என, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக, ஆறு பிரிவுகளில், 42 வகைகளில், 80 பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களுக்கு வந்த தேர்தல் பொருட்கள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
தொடர்ந்து, ஓட்டுச்சாவடி வாரியாக பொருட்கள் பிரித்து, ஓட்டுப்பதிவுக்கு முந்தையநாளில், தேர்தல் பொருட்கள் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படும், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

