/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு விரைவில் துார்வாரப்படும் என எதிர்பார்ப்பு
/
பில்லுார் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு விரைவில் துார்வாரப்படும் என எதிர்பார்ப்பு
பில்லுார் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு விரைவில் துார்வாரப்படும் என எதிர்பார்ப்பு
பில்லுார் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு விரைவில் துார்வாரப்படும் என எதிர்பார்ப்பு
ADDED : மே 27, 2024 01:47 AM
கோவை;பில்லுார் அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியமானது துார்வாருவதற்கான பணிகளை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி, பில்லுார், ஆழியாறு அணைகள் உள்ளன. இதில், பில்லுார்-1, 2, 3 திட்டங்களில் கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் பல்லடம் வரை குடிநீர் செல்கிறது. பில்லுார் அணையின் நீர் தேக்க உயரம், 100 அடி என்ற நிலையில், 45 அடிக்கு வண்டல் மண் படிந்துள்ளது.
இதனால், நீர் மட்டம் வேகமாக சரிந்து விடுவதால், அணையை துார்வார வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு மின்சார வாரியம் வாயிலாகஅணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், துார்வார அனுமதி வழங்கப்பட்டது.
மழை இல்லாததால் கடந்த மாதம், 60 அடிக்கும் குறைவாகவே நீர் மட்டம் இருந்தது.
அணை துார்வாருவது தொடர்பான, மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில், நீர் வரத்து துவங்கியதும், பிரத்யேக இயந்திரம் கொண்டு, வண்டல் மண் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்ததால், அணையின் நீர் மட்டம், 90 அடியாக உள்ளது. இதையடுத்து அணையை துார்வாரும் பணிகள், விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தண்ணீருக்குள் படிந்துள்ள, 25 ஆயிரம் கன மீட்டர் வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''துார்வாரும் பணியை மேற்கொள்வது மின்வாரியம்தான். அதற்கான அறிவுறுத்தல்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், திட்டத்தை அவர்கள் துவங்குவார்கள்,'' என்றார்.

