/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நிபா' பாதித்த சிறுவன் இறப்பு ;பாலக்காட்டில் தீவிர கண்காணிப்பு
/
'நிபா' பாதித்த சிறுவன் இறப்பு ;பாலக்காட்டில் தீவிர கண்காணிப்பு
'நிபா' பாதித்த சிறுவன் இறப்பு ;பாலக்காட்டில் தீவிர கண்காணிப்பு
'நிபா' பாதித்த சிறுவன் இறப்பு ;பாலக்காட்டில் தீவிர கண்காணிப்பு
ADDED : ஜூலை 22, 2024 08:23 PM
பாலக்காடு;கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 'நிபா' தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த, 14 வயது சிறுவன் இறந்தார். இதையடுத்து, பாலக்காடு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்காடு என்ற பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன், 'நிபா' தொற்று பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். இவருடன் தொடர்புள்ள இருவர், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளனர். தற்போது அவர்கள் இருவரும், மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், பாலக்காடு சுகாதாரத்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'அமீபிக்' மூளை காய்ச்சல் மற்றும் சுவாச தொடர்பான அறிகுறி உள்ளவர்களை கவனித்து வருகிறோம். இதனால், யாரும் பயம் கொள்ள வேண்டாம்; எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டும் போதும். அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்களும் எடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவமனை ஊழியர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். நோய் தொற்று எதிர்கொள்ள, சுகாதாரத் துறையின் தலைமையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட துவங்கியுள்ளது.
பறவைகள் கடித்த பழங்களை சாப்பிட கூடாது. சுகாதாரத் துறையின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். 'நிபா' தொற்று அச்சம் உள்ள சூழலில், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.

