/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பாதுகாப்பு: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பாதுகாப்பு: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு
ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பாதுகாப்பு: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு
ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பாதுகாப்பு: தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு
ADDED : ஏப் 11, 2024 11:54 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 'பேலட் பேப்பர்' பொருத்தும் பணி நிறைவடைந்தது.
பொள்ளாச்சியில் லோக்சபா தேர்தலையொட்டி,ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் 'பெல்' நிறுவன ஊழியர்கள் வாயிலாக, 'விவிபேட்' இயந்திரம் முறையாக இயக்கத்தில் உள்ளதா என்றும்; அதில், சின்னம் பொறிக்கப்பட்ட பேப்பர் பொருத்தும் பணியும் நடந்தது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 'பேலட் பேப்பர்' பொருத்தும் பணி நடந்தது. இப்பணிகள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று நடந்த இப்பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், பொள்ளாச்சிக்கு தேவையான, 325 கன்ட்ரோல் யூனிட், 325 பேலட் இயந்திரம், 351 'விவிபேட்' இயந்திரங்கள் உள்ளன. அதில், 269 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும், 20 சதவீதம், 'ரிசர்வ்' வைக்கப்படும் இயந்திரங்களிலும், 'பேலட்' பேப்பர் பொருத்தும் பணி நடந்தது.
வால்பாறையில், 285 கன்ட்ரோல் யூனிட், 285 பேலட் யூனிட், 308 'விவி பேட்' இயந்திரங்கள் வந்துள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும், 20 சதவீதம், 'ரிசர்வ்' இயந்திரங்களில் பொருத்தும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்தததால், 'சீல்' வைத்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.

