/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'காட்சியா' நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
'காட்சியா' நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : மே 21, 2024 12:54 AM
கோவை;கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் (காட்சியா) 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, புரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடந்தது.
சங்கத்தின் புதிய தலைவராக விஜயகுமார், துணைத் தலைவராக செவ்வேல், செயலாளராக ராஜரத்தினம் மற்றும் பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் பொறியாளர் வெங்கடசுப்ரமணி ஆகியோர், பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
புதிய தலைவர் விஜயகுமார் பேசியதாவது:
கட்டுமான மூல பொருட்களின் விலை, நாளுக்கு நாள் உயர்வதை தடுத்து, ஒரு நிலையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். இதற்காக, சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகளுக்கான உரிமங்கள் வழங்குவதில் மிகவும் காலதாமதம் ஏற்படுவதால், மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் ஆய்வு செய்து, உரிமங்களை வழங்க வேண்டும்''
இவ்வாறு, அவர் பேசினார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் துணை செயலாளர் பிரேம்குமார் பாபு, துணை பொருளாளர் ரவி, மக்கள் தொடர்பு அலுவலர் திருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

