/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இம்சை அரசன் 23ம் புலிகேசி... வெள்ளை குடை ஏந்திய வேந்தர்!' கோவையில் ஸ்டாலினை விளாசிய இ.பி.எஸ்.,
/
'இம்சை அரசன் 23ம் புலிகேசி... வெள்ளை குடை ஏந்திய வேந்தர்!' கோவையில் ஸ்டாலினை விளாசிய இ.பி.எஸ்.,
'இம்சை அரசன் 23ம் புலிகேசி... வெள்ளை குடை ஏந்திய வேந்தர்!' கோவையில் ஸ்டாலினை விளாசிய இ.பி.எஸ்.,
'இம்சை அரசன் 23ம் புலிகேசி... வெள்ளை குடை ஏந்திய வேந்தர்!' கோவையில் ஸ்டாலினை விளாசிய இ.பி.எஸ்.,
ADDED : ஏப் 05, 2024 01:01 AM

கோவை;''தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. பிரதமரை எதிர்ப்பவர்கள், ஏன் அவரை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' போல், வெள்ளை குடை ஏந்திய வெள்ளை வேந்தர் ஸ்டாலின்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
கோவை, 'கொடிசியா'வில் நடந்த பொதுக்கூட்டத்தில், கோவை லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது:அ.தி.மு.க., கூட்டணி பலவீனமாக உள்ளதாக கூறினார்கள். ஆனால், இன்று நாம் முன்னணியில் உள்ளோம். இந்த, 10 நாட்களில் நாம் நிரூபித்துள்ளோம். இதைப்பார்த்து ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துள்ளது. அதனால் தான், எதையோ பிதற்றிக் கொண்டுள்ளார்.
ஸ்டாலின் கூட்டணி பலம் உள்ளது, ஜெயித்து விடலாம் என கனவு கண்டார். அது பகல் கனவாகிவிட்டது. அ.திமு.க.,விடம் மக்கள் பலம் உள்ளது.
முதல்வர் பதவியில் உள்ள ஸ்டாலின் நாகரிகமாக பேச வேண்டும். நாவடக்கம் தேவை. உங்களிடம் சரக்கு இல்லை. அதனால், அ.தி.மு.க., வை விமர்சனம் செய்கிறீர்கள்.அ.தி.மு.க., ஆட்சி இருண்ட ஆட்சி என பேசுகிறீர்கள். மேடையை போடுங்கள். உங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து கூறுங்கள். நானே வந்து பேசுகிறேன். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை கூறுகிறோம்.
பா.ஜ.,வை பார்த்து பயமா?
அ.தி.மு.க., வினர், பா.ஜ.,வை பார்த்து பயப்படுகின்றனர் என்கிறார். பா.ஜ., மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள எந்த கட்சியையும் பார்த்து பயந்தது இல்லை. உங்களை போல அடிமையாக நாங்கள் இல்லை. எதிர்கட்சியாக இருக்கும்போது, 'கோ - பேக்' மோடி என்றனர். பின்னர், 'வெல்கம் மோடி' என்கின்றனர். இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க., தான்.
பிரதமரை எதிர்ப்பவர், ஏன் அவரை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். அ.தி.மு.க., தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும்.
கள்ளத்தொடர்பு, கள்ளக்கூட்டணி என்கிறார். நாங்கள் கூட்டணியை விட்டு வெளியே வந்து விட்டோம். எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்ப்போம். இம்சை அரசன், 23ம் புலிகேசியில் வருவது போல், வெள்ளை குடை ஏந்திய வெள்ளை வேந்தர் ஸ்டாலின்.
அ.தி.மு.க., தான் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்திய கட்சி. அதற்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. மூன்றாண்டு கால தி.மு.க., ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. புதிய திட்டங்களுக்காக இதுவரை, 52 குழு போட்ட ஒரே அரசு தி.மு.க., தான். ஆனால், எந்த திட்டமும் வரவில்லை.
விலைவாசி உயர்வால் மக்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரி மேல் வரி போட்ட ஒரே அரசு தி.மு.க., தான்.
மதுபான கொள்ளை
தேர்தல் பத்திரத்தில் பணம் வாங்கி கொண்டு, நல்லவர் போல நடிக்கிறார். சின்னத்திருடன், பெரிய திருடனை பார்த்து கேள்வி கேட்டது போல், உள்ளது. ஆன்லைன் ரம்மி ஒரு மாய உலகம். இந்த வழக்கை முறையாக நடத்தவில்லை. ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனத்திடம் தி.மு.க., ரூ.550 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கி உள்ளது.மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வாங்கியவர், செந்தில் பாலாஜி. மதுபானத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி கொள்ளையடித்து ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் அடிமையாக இருப்பதால் தான் கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது.
தி.மு.க., நிர்வாகி ஜாபர்சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தி.மு.க., வினருடன் தொடர்பு வைத்துள்ளார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., க்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

