/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
/
வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பேன்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
ADDED : மார் 29, 2024 11:11 PM

- நமது நிருபர் -
வெள்ளலுார் குப்பைக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணாவிடில், எம்.பி., பதவியை ராஜினாமா செய்வேன், என, பா.ஜ., பொள்ளாச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் வசந்தராஜன் பேசினார்.
கோவை, கோணவாய்க்கால்பாளையம் முத்துகுமாரசாமி முருகன் கோவிலில், வழிபட்ட பின் அவர் தனது முதல் பிரசாரத்தை துவக்கினார்.
வேட்பாளர் வசந்தராஜன் பேசியதாவது:
தி.மு.க., - அ.தி.மு.க., என இரு திராவிட கட்சியினரும், குப்பைக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. நான் மத்திய சட்டம், சுற்றுச்சூழல் அமைச்சர்களை சந்தித்து, மனு கொடுத்தேன்.
இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு, நிலத்தடி நீர் மாசு குறைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
துர்நாற்றம் உள்ளிட்ட எந்த பிரச்னையும் இருக்காது. இதனை பதவியேற்றதிலிருந்து நான்காண்டுகளுக்குள் செய்யாவிடில், எனது பதவியை ராஜினாமா செய்வேன்.
அதுபோல், ரூ.40 -- 50 கோடி செலவிட்டு நிறுத்தப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்படும். போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்தப்படும்.
கடந்த ஐந்தாண்டுகளில், தி.மு.க., எம்.பி.,யை யாரேனும் ஒருமுறையாவது பார்த்துள்ளீர்களா? அவரால் ஏதேனும் பயனடைந்துள்ளீர்களா? தி.மு.க.வினர் ஓட்டு கேட்டு வந்தால் கேளுங்கள்.
இம்முறையும் மோடி, பிரதமர் ஆவது உறுதி. ஆதலால் அவரிடம், நமது மாவட்டத்திற்கு தேவையானதை கேட்டுப் பெற, தாமரைக்கு வாக்களியுங்கள். நீங்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம். உரிமையோடு உங்கள் பிரச்னைகளை கூறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் கவுன்சிலர் மணிமாறன், கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., துணை தலைவர் முரளி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஸ்ரீராம் நகர், ஜி.டி.டேங்க், ஆட்டுத்தொட்டி, காந்திஜி ரோடு, பாரத் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, ஈச்சனாரி, கணேசபுரம், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வசந்தராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

