/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன்னீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
/
மன்னீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா
ADDED : ஏப் 28, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்;அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா, மே 1ம் தேதி நடக்கிறது.
பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா, மே 1ம் தேதி நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது.
இதையடுத்து, அபிஷேக பூஜையும், குரு பகவான் உட்பிரகாரத்தில் உலா வருதலும் நடக்கிறது. மாலை 5 மணி 19 நிமிடத்துக்கு குரு பகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து, மகா தீபாராதனை நடக்கிறது.
குரு பெயர்ச்சி விழாவில் பங்கேற்று இறையருள் பெற, கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

