/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகப்பேறு டாக்டர்களை கூடுதலாக நியமிக்க அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 10, 2024 01:58 AM

கோவை:மகப்பேறு டாக்டர்களை கூடுதலாக நியமிக்க தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம் கோவை ஐ.எம்.ஏ., அரங்கில் நடந்தது. தேர்தலில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவராக மதுரை மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் செந்தில் தேர்வு செய்யப்பட்டார்.
மாநில பொதுச்செயலாளராக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன், செயலாளர்களாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜெஸ்லின், நாகப்பட்டினத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பொருளாளராக திருவள்ளூர் மாவட்ட பிரபு சங்கர், அவைத் தலைவராக கோவையை சேர்ந்த ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்று கொண்டனர்.
'தமிழகம் முழுவதும் மகப்பேறு டாக்டர்கள், 700 பேர், 6 லட்சம் பிரசவம் பார்க்கின்றனர். இதனால் டாக்டர்களுக்கு பணி சுமை ஏற்படுகிறது.
எனவே, 300 டாக்டர்களை கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்' உட்பட, பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.