/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சலனமற்ற மனதில் பகவான் தோன்றுவார்'
/
'சலனமற்ற மனதில் பகவான் தோன்றுவார்'
ADDED : மே 27, 2024 01:44 AM
கோவை:கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'ஞான வேள்வி' என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, ராம்நகரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீகிருஷ்ணா பேசியதாவது:
ஞானிகள் உபதேசம் செய்யும் போது, மனதில் வேறு சிந்தனை குறுக்கீடு இல்லாமல் கேட்க வேண்டும். மனமற்ற நிலையில் தான், நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் ரமணர். இதைதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி, 'ஆர்ட் ஆப் லிசனிங்' என்று சொல்கிறார். இதன் அர்த்தம் வேறு சிந்தனை, எண்ணம் இல்லாமல் கேட்பது என்று பொருள். நிலையான சலனமற்ற மனதில், பகவான் தோன்றுவார். நம்மிடம் இருக்கும் சிறிய மவுனம், மகா மவுனத்தை நோக்கி கடத்த வேண்டும். மனம் வெளியே ஓடும் போது உலகமாகவும், அகத்தின் உள்ளே ஓடும் போது, பிரம்மமாகவும் இருக்கிறது என்கிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.

