/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழையால் தென்னந்தோப்புகளில் சூழ்ந்த வெள்ளம்: கொண்டை ஊசி வளைவில் விழுந்த பாறை அகற்றம்
/
மழையால் தென்னந்தோப்புகளில் சூழ்ந்த வெள்ளம்: கொண்டை ஊசி வளைவில் விழுந்த பாறை அகற்றம்
மழையால் தென்னந்தோப்புகளில் சூழ்ந்த வெள்ளம்: கொண்டை ஊசி வளைவில் விழுந்த பாறை அகற்றம்
மழையால் தென்னந்தோப்புகளில் சூழ்ந்த வெள்ளம்: கொண்டை ஊசி வளைவில் விழுந்த பாறை அகற்றம்
ADDED : மே 19, 2024 10:56 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர் மழையால், ரோடுகளில் வெள்ளப்பெருக்காக மழைநீர் ஓடியது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக மதியத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறைந்து, உஷ்ணம் தணிந்துள்ளதால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் மதியம் பெய்த மழையால், நகரம் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள ரோடுகளில் வெள்ளப்பெருக்ககாக மழைநீர் ஓடியது.
அதில், பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி பகுதியில், பலத்த மழை பெய்தது; அதில், தென்னந்தோப்புகளில் மழைநீர் தேங்கி வழிந்தோடி அருகே உள்ள கால்வாய் மற்றும் ரோடுகளில் வழிந்தோடியது.
கிணறுகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததுடன், அங்குள்ள குளமும் நிரம்பியது. அப்பகுதியில் விவசாயி வைத்துள்ள மழை மானியில், 22 செ.மீ., அளவு மழை பெய்ததாக பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வரலாறு காணாத மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் வறட்சியால், விலைக்கு தண்ணீர் வாங்கியும், போர்வெல் போட்டும் தென்னை மரங்களை காப்பாற்ற போராடினர். இந்நிலையில், சில நாட்களாக உழவு மழை போன்று பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வால்பாறை ரோடு, 16வது கொண்டை ஊசி வளைவில் விழுந்த பாறையை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
மழையளவு (மி.மீ.,)
சோலையாறு அணை - 26, பரம்பிக்குளம் - 42, ஆழியாறு - 2.6, திருமூர்த்தி அணை - 38, அமராவதி - 3, வால்பாறை - 54, மேல் நீராறு - 38, கீழ் நீராறு - 32, காடம்பாறை - 19.5, சர்க்கார்பதி - 12, வேட்டைக்காரன்புதுார் - 3.80, மணக்கடவு - 17, துாணக்கடவு - 64, பெருவாரிப்பள்ளம் - 49, மேல் ஆழியாறு - 30, நவமலை - 31, பொள்ளாச்சி - 43, நல்லாறு - 30, நெகமம் - 11 என மழையளவு பதிவாகியது.

