/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் சங்கத்தில் ஐம்பெரும் விழாக்கள்
/
தமிழ் சங்கத்தில் ஐம்பெரும் விழாக்கள்
ADDED : மே 17, 2024 10:41 PM
அன்னுார்;சர்க்கார் சாமக்குளத்திலுள்ள கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கத்தில், நாளை ஐம்பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.
கோவை சோதிமைய அறக்கட்டளையுடன் இணைந்த, கவையன்புத்தூர் தமிழ் சங்கம், சர்க்கார் சாமக்குளத்தில் செயல்படுகிறது. சிவசக்தி சமூக சேவை மைய கட்டடத்தில், இந்த தமிழ்ச் சங்கத்தின் ஐம்பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.
நாளை (19ம் தேதி) காலையிலிருந்து மதியம் வரை, பாவேந்தர் விழா, பாராட்டு விழா, விருது வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா மற்றும் சங்கத்தின் அறுபதாவது திங்கள் அமர்வு ஆகிய ஐம்பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.
இதில், வானோக்கி வாழும் உலகெல்லாம் என்ற தலைப்பில் அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை தலைவர் சந்திர கிருஷ்ணனும், தமிழ் ஆசிரியை செந்தில் வடிவு குடும்ப விளக்கு, இசை ஆசிரியை மகேஸ்வரி நித்தியானந்தம் அழகின் சிரிப்பு, கணித ஆசிரியை பானுமதி இருண்ட வீடு, சுந்தர வடிவேலு வேங்கையே எழுக, பிரகாசு பாரதியும் பாவேந்தரும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் பழனிசாமி, பொது செயலாளர் கணேசன், பொருளாளர் தாமோதரசாமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

