/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பின்றி மின் வெட்டு: விவசாயிகள் கடும் அதிருப்தி
/
அறிவிப்பின்றி மின் வெட்டு: விவசாயிகள் கடும் அதிருப்தி
அறிவிப்பின்றி மின் வெட்டு: விவசாயிகள் கடும் அதிருப்தி
அறிவிப்பின்றி மின் வெட்டு: விவசாயிகள் கடும் அதிருப்தி
ADDED : மார் 29, 2024 10:27 PM
நெகமம்;நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில், அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படுவதால், தென்னை விவசாயிகள் பாதிப்பு அடைகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. குளம், குட்டைகள், கிணறுகளில் நீர்மட்டம் சரிந்து, கிட்டத்தட்ட வற்றிவிட்டன. நிலத்தடி நீரும் சரிந்து விட்டது.
இதனால், பல்லாயிரம் ஏக்கர் தென்னை சாகுபடி பரப்பு பாதிப்பு அடைந்துள்ளது. தவிர, மானாவாரியாக மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே, வீதம்பட்டி வேலுார், ரங்கநாயக்கன்பாளையம், பழையூர், வாகத்தொழுவு, வீதம்பட்டி ஆகிய பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுகிறது.
விவசாயிகள் கிணற்றில் இருக்கும் நீரை பயிர்களுக்கு பாய்ச்ச முடியவில்லை. இதனால், சாகுபடி செய்யப்பட்ட தென்னை, வாழை, காய்கறி பயிர்கள் வாடுகின்றன. அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு காரணமாக, மின் மோட்டார்களும் பழுதாகி விடுகிறது.
அவற்றின் பழுது நீக்கத்திற்கு, 3 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. விவசாயிகள் மட்டுமின்றி தொழில் செய்வோரும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மின் வெட்டு குறித்து, மின்வாரியத்தினர் முன்னறிவிப்பை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

