/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரிவாளை காட்டி பணம்பறிப்பு; 3 பேர் கைது
/
அரிவாளை காட்டி பணம்பறிப்பு; 3 பேர் கைது
ADDED : ஆக 11, 2024 11:29 PM
மேட்டுப்பாளையம்:வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம், அரிவாளை காட்டி பணத்தை, பறித்து சென்ற மூன்று இளைஞர்களை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 46. கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு, இவர் தனது வீட்டில், குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, உறவினரான அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், 23, அரிவாளுடன் வந்து, நாகராஜ் மற்றும் அவரது மனைவியை மிரட்டி, பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுக்கவே, பிரசாந்த் தனது நண்பர்களான மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சச்சின், 19 மற்றும் திலிப், 19 ஆகியோரை வரவழைத்து, நாகராஜை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். பின் நாகராஜை தாக்கி அவரிடம் இருந்த ரூ. 3,200ஐ பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து, நாகராஜ் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிந்த போலீசார், நேற்று பிரசாந்த், சச்சின், திலிப் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,200 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

