/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுக்கு மரக்கன்றுகள் பள்ளி சார்பில் வழங்கல்
/
மக்களுக்கு மரக்கன்றுகள் பள்ளி சார்பில் வழங்கல்
ADDED : ஜூன் 10, 2024 12:00 AM
ஆனைமலை;ஆனைமலை அருகே ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார்.
தேசிய பசுமைப் படை மாணவர்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாக்க மழை நீரை சேமியுங்கள், நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள், மரங்கள் அதிக அளவு நடவு செய்யுங்கள், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் துணி பைகளை பயன்படுத்துங்கள் போன்ற பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
பள்ளியின் தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியர் பாலசுப்பிரமணியன், மாணவர்களுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

