/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நீரோடையை துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 17, 2024 11:32 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடசித்தூர், பனப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ளது. இங்கு பெரும்பாலும் மானாவாரியில், மழையை மட்டுமே நம்பி பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள போர்வெல்லில், தற்போது நீர்மட்டம், 800 முதல் 1,000 அடி வரை உள்ளதால் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதை தவிர்க்க, கிராமப்பகுதிகளில் உள்ள நீரோடைகளை அரசு துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். மழை நீரை சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, நீரோடைகளை சுத்தம் செய்யும் பணிகளை அதிகாரிகள் துவங்க வேண்டும்.
இப்பகுதியில் பி.ஏ.பி., பாசனம் இல்லாததால், நிலத்தின் தன்மைக்கு ஏற்ப என்ன பயிர் சாகுபடி செய்யலாம், என, வேளாண் துறை சார்பில், ஆலோசனை வழங்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

