/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு
/
டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு
ADDED : மே 18, 2024 11:14 PM
கோவை;கோவை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு வைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
கோவை அரசு மருத்துவமனையில், 2 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் நலமுடன் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில், 15 படுக்கை வசதியுடன் டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டு தயாராக உள்ளது.
சிகிச்சை அளிப்பதற்கான டாக்டர்களும் போதிய அளவில் உள்ளனர். மூன்று நாட்களில் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் டாக்டரை அணுக வேண்டும். அதன்பின், டாக்டரின் அறிவுரையின்படி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது.
டெங்கு காய்ச்சல் நல்ல நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் தான் உற்பத்தியாகிறது. அதனால் வீட்டின் முன் தேங்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், கொசுக்கள் பரவாமல் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

