ADDED : மே 01, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : தற்போது வெப்ப அலை வீசுவதால், வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ள மாவட்டங்கள் பட்டியலில் திருப்பூர் மாவட்டமும் உள்ளது. நேற்றுமுன்தினம், 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தொடர்ந்து வெப்பநிலை அதிகமாகி கொண்டே இருப்பதால், மதிய வேளையில் சாலையில் அனல் காற்று வீசுகிறது. வாகனங்களில் செல்வோர் முகம், கை, கால்களில் வெயில் அனலாக சுட்டெரிக்கிறது.
பணி நிமித்தம், தவிர்க்க முடியாத சூழல் சென்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளவர்கள் மட்டும் மதிய வேளையில் சாலையில் பயணிக்கின்றனர். மற்றவர்கள் எதுவென்றாலும், வெயில் குறையட்டும் என வெளியில் தலைகாட்டுவதில்லை.
மதிய வேளையில், பிரதான ரோடுகளில் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.

