/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெட்டப்படும் தென்னை மரங்கள் :வறட்சியால் பாதிப்பால் வேதனை
/
வெட்டப்படும் தென்னை மரங்கள் :வறட்சியால் பாதிப்பால் வேதனை
வெட்டப்படும் தென்னை மரங்கள் :வறட்சியால் பாதிப்பால் வேதனை
வெட்டப்படும் தென்னை மரங்கள் :வறட்சியால் பாதிப்பால் வேதனை
ADDED : மே 31, 2024 11:19 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் வறட்சி காரணமாக காய்ந்த தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றுகின்றனர்.
கிணத்துக்கடவு - வடசித்தூர் செல்லும் வழியில், கொண்டம்பட்டி அருகே உள்ள தனியார் தோப்பில் வறட்சி காரணமாக ஏராளமான தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாயி மயில்சாமி கூறியதாவது:
மொத்தம், 3.87 ஏக்கர் பரப்பளவில், 400 தென்னை மரங்கள் உள்ளது. வறட்சி நிலவுவதால், தென்னைக்கு போதிய அளவு நீர் இல்லாமல், கடந்த, 2 மாதத்திற்கு முன், 50 தென்னை மரங்களை வெட்டினோம். அதன்பின் தொடர் வறட்சியால் காய்ந்த மரங்களை வெட்டுகிறோம். தற்போது மீண்டும் 50 தென்னை மரங்களை வெட்டியுள்ளோம்.
வெட்டப்பட்ட ஒவ்வொரு மரமும் குறைந்த விலைக்கே விற்கப்படுகிறது. வயது குறைந்த மரங்கள், ஒன்றுக்கு 100 ரூபாய் மட்டுமே வியாபாரிகள் தருகின்றனர். வயது மூத்த மரங்களுக்கு 400 ரூபாய் வரை தருகின்றனர்.
தற்போது வெட்டப்பட்டுள்ள மரங்கள் அனைத்தும், 40 வயதுடையவை. மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததும், மீண்டும் தென்னங்கன்று நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினார்.

