/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்'
/
'மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்'
'மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்'
'மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்'
ADDED : ஜூன் 01, 2024 12:34 AM
கோவை;மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க, நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர் சங்கம், கோவை மாநகராட்சி அண்ணா சுகாதார பணியாளர் சங்கம், பகுஜன் சமாஜ் டிரேடு யூனியன், கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் துாய்மை பணியாளர் சங்கம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு:
மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு, குறைந்தபட்ச சம்பளம் வழங்குவது தொடர்பாக கடந்தாண்டு அக்., 25ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
அதன்படி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, நகராட்சி நிர்வாக கமிஷனர் அறிக்கை அளித்தார். அதன் பின், மாவட்ட நிர்வாகம் அரசாணை, 62ஐ நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பித்தும், இதுவரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, குறைந்தபட்ச சம்பளம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் தொடர்பாக மனு அளிக்கும் தற்காலிக துாய்மை பணியாளர் மீது சம்பளம் வழங்காமல், இழுத்தடிப்பது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எனவே, சம்பளம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பெண் தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீதும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

