/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!
/
இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!
இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!
இன்று மனுத்தாக்கல் நிறைவு; சுயேட்சையாக களமிறங்கறாங்க!
ADDED : மார் 26, 2024 11:00 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை, 17 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த, 20ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அ.தி.மு.க., - 4, தி.மு.க., - 2, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மாற்று வேட்பாளர்கள் தலா ஒன்று, பகுஜன் சமாஜ் கட்சி ஒன்று, சுயே., இரண்டு பேர் என மொத்தம் நேற்று முன்தினம் மட்டும், 11 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து நேற்று, தி.மு.க., வேட்பாளர் பெயரில், இரண்டு மனுக்களும், உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தை சேர்ந்த பழனிச்சாமி,44, என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த, 20ம் தேதி முதல் இதுவரை, 17 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இன்றுடன் மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.அதனால், இன்று சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்ய பலர் ஆர்வமாக மனு பெற்று சென்றுள்ளனர்.

