/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமான அரிசி வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
/
தரமான அரிசி வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மார் 28, 2024 05:00 AM
பொள்ளாச்சி, : ''ரேஷன்கடைகளில் கார்டுதாரர்களுக்கு, தரமான அரிசி வழங்க வேண்டும்,'' என,கோவைகலெக்டர் கிராந்திகுமார் வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
கோவை மாவட்டத்தில், 1,538 ரேஷன் கடைகள் உள்ளன. 11.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை மாதம்தோறும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அனைத்து அரிசிகார்டுகளுக்கும் மத்திய அரசு சார்பில், இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாதம் ரேஷன்கடைகளில் வழங்கப்பட்ட அரிசி தரமில்லாமல் இருந்ததாக, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில்,கோவைபுலியகுளம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன்கடையில், கலெக்டர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ''ரேஷனில் வழங்கப்படும், அரிசி தரமாக இருக்க வேண்டும். அரிசி மோசமாக உள்ளதாக கார்டுதார்கள்புகார் தெரிவித்தால், உடனே மாற்றி நல்ல அரிசி வழங்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

