/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை எஸ்.பி., ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் கோவை எஸ்.பி., ஆய்வு
ADDED : ஏப் 29, 2024 09:08 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஓட்டு எண்ணும் மையத்தில், கோவை எஸ்.பி., ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தேர்தல் முடிவடைந்த நிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் இருப்பு வைத்து அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, எஸ்.பி., பத்ரிநாராயணன் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பாதுகாப்பு பணிகள், ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, அரசியல் கட்சியினர் பார்வையிடும் வகையில் உள்ள, 'டிவி' அறையிலும் ஆய்வு செய்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எஸ்.பி., கூறுகையில், ''ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என பார்வையிடப்பட்டது. பாதுகாப்பு பணிகள் முழு அளவில் மேற்கொள்ளப்படுகின்றன,'' என்றார்.

