/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி
/
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி
ADDED : மே 14, 2024 01:47 AM

கோவை;சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை கோர்ட் உத்தரவிட்டது. விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, கோஷம் எழுப்பினார்.
பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து, யு யூடிப் சேனலில்தரக்குறைவான அவதூறு கருத்துக்களை தெரிவித்த, சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர், கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது, கஞ்சா கடத்தல் உட்பட மாநிலம் ழுழுவதும் மேலும் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சைபர் கிரைம் வழக்கில், அவரை ஐந்து நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, ஜே.எம்:4, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கரை, மாஜிஸ்திரேட் முன்னிலையில்ஆஜர்படுத்தினர்.
அப்போது சவுக்கு சங்கரிடம், 'போலீஸ் காவலில் செல்வதற்கு ஆட்சேபணை தெரிவிக்கிறீர்களா' என்று மாஜிஸ்திரேட் கேட்டார். 'ஆட்சேபணை இல்லை' என்று சங்கர் பதில் அளித்தார்.
அதை தொடர்ந்து, சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, மாஜிஸ்திரேட் சரவணபாபு உத்தரவிட்டார். போலீஸ் காவல் விசாரணையின் போது, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, 15 நிமிடங்கள் அவரது வக்கீலை சந்தித்து பேச, அனுமதி அளிக்கப்பட்டது. இன்று மாலை 5:00 மணிக்குள் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

