/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாய் பணி துவங்கியாச்சு; மழை கால பாதிப்பு தவிர்ப்பு
/
கால்வாய் பணி துவங்கியாச்சு; மழை கால பாதிப்பு தவிர்ப்பு
கால்வாய் பணி துவங்கியாச்சு; மழை கால பாதிப்பு தவிர்ப்பு
கால்வாய் பணி துவங்கியாச்சு; மழை கால பாதிப்பு தவிர்ப்பு
ADDED : மே 21, 2024 11:41 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சியில் கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடி ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் அருகே கால்வாயில் கழிவு நீர் செல்லாமல் தேங்கியும், அவ்வப்போது ரோட்டில் வழிந்தும் செல்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
தற்போது, மழை பெய்ய துவங்கியதால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு புதிதாக கால்வாய் அமைக்க, 15வது நிதிக்குழுவில் இருந்து, 3.42 லட்சம் ரூபாய் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து, 2.85 லட்சம் ரூபாய் என, மொத்தம் 6.27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி துவங்கப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர் ரத்தினசாமி கூறுகையில், ''மழை காலத்தில் மகளிர் சுய உதவி குழு அலுவலகம் அருகே, அதிக அளவு மழை நீர் செல்ல வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதியில் கழிவு நீர் செல்லவும் கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
எனவே, கழிவு நீர் மற்றும் மழை நீர் இரண்டும், இந்த கால்வாயில் செல்லும். மேலும், இதன் அருகே 'சோக் பிட்' அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனால், மழை நீர் ரோட்டில் வழிந்தோடுவது தடுக்க முடியும்,'' என்றார்.

