/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே மேடையில் பதினோரு மணி நேரம் ஆயுதங்களுடன் 'பைட்'
/
ஒரே மேடையில் பதினோரு மணி நேரம் ஆயுதங்களுடன் 'பைட்'
ஒரே மேடையில் பதினோரு மணி நேரம் ஆயுதங்களுடன் 'பைட்'
ஒரே மேடையில் பதினோரு மணி நேரம் ஆயுதங்களுடன் 'பைட்'
ADDED : ஜூன் 09, 2024 12:48 AM

இக்கால சிறுவர்கள் பலர், கிரிக்கெட், புட்பால் என சென்று கொண்டிருக்கும் போது கோவையை சேர்ந்த சிறுவன் தமிழ் பாரம்பரிய கலைகளை செய்து, சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பு கிருஷ்ணன், லாவண்யா தம்பதியின் மகன், கோகுல் கிருஷ்ணா,11. கடந்த சில ஆண்டுகளாக சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகளை கற்று வருகிறார்.
சிறு வயதிலேயே ஆர்வத்துடன் கலைகளை கற்றுக்கொண்டதால், சிறுவனின் பெற்றோர் ஊக்கமளித்து சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தொடர்ந்து, கோகுல் கிருஷ்ணா கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு ஒற்றை இரட்டை சிலம்பம், வாள் மற்றும் சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு என, ஐந்து தமிழ் பாரம்பரிய ஆயுதங்களை பயன்படுத்தி, ஒரே மேடையில் தொடர்ந்து பதினோரு மணி நேரம் சுற்றியுள்ளார்.
சாதனை புத்தகங்களில் இடம் பிடித்த சிறுவனை பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

