/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவை காய்ச்சல் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்
/
பறவை காய்ச்சல் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பறவை காய்ச்சல் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்
பறவை காய்ச்சல் பாதிப்பு; தடுப்பு நடவடிக்கை தீவிரம்
ADDED : பிப் 21, 2025 11:20 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் கோழி பண்ணைகளில், பறவை காய்ச்சல் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம், அன்னுார், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் கோழிகளுக்கு கிருமிநாசினி தெளித்தல், நோய் தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணை உரிமையாளர்கள் கால்நடைத்துறை மருத்துவர்களின் அறிவுரையினச் பேரில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மண்டல கால்நடைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோழி பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. அந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ள வழியாக தான் பண்ணைக்கு வருவோர் மற்றும் கோழிப்பண்ணைக்கு வரும் வாகனங்கள் வரவேண்டும். வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். அந்நியர்கள் உள்ளே வர அனுமதிக்கக்கூடாது.
கோழிப்பண்ணைகளில் சுழற்சி முறையில் மாதம் சுமார் 40 மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இது ரெகுலரான ஒரு நடவடிக்கை. அதில் இதுவரை எந்த ஒரு கோழிக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.
பண்ணைகளில் திடீரென கோழிகளின் இறப்பு அதிகம் ஏற்பட்டால் அல்லது கோழிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளும் கண்காணிக்கப்படுகின்றன.
இதுகுறித்து, கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில், காரமடை அருகே தோலம்பாளையம் கால்நடை மருத்தகத்திற்கு உட்பட்ட கேரள மாநில எல்லைப்பகுதியான கோபனாரியில் கால்நடை மருத்துவர்கள் குழு விரைவில் முகாமிட உள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களுக்கும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளன. எல்லையோர வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் கால்நடை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர், என்றார்.

