/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு
/
எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு
எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு
எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நெல்லியம்பதியில் விழிப்புணர்வு
ADDED : மே 19, 2024 10:50 PM

பாலக்காடு;நெல்லியம்பதியில், எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி. வன எல்லையோர பகுதியான இங்கு, பருவமழை நோய்கள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுகாதாரத்துறையினர், ஊராட்சியின் ஒத்துழைப்புடன் எலி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று கைகாட்டியில் விழிப்புணர்வு முகாமும், தொழில் உறுதி திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் ஆனந்த் விழிப்புணர்வு வகுப்பு நடத்தினார். சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜாய்சன், தொழிலாளிகளுக்கு மாத்திரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் அப்சல், செவிலியர் சுதினா ஆகியோர் பங்கேற்றனர்.