/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்காணிக்கச் சொல்லுங்க! மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் முறையீடு
/
மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்காணிக்கச் சொல்லுங்க! மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் முறையீடு
மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்காணிக்கச் சொல்லுங்க! மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் முறையீடு
மாசு கட்டுப்பாடு வாரியத்தை கண்காணிக்கச் சொல்லுங்க! மத்திய நிதியமைச்சரிடம் விவசாயிகள் முறையீடு
ADDED : செப் 17, 2024 11:31 PM

கோவை : சமீபத்தில் கோவை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி, பொருளாளர் ரங்கநாதன், பிளீச்சி அமைப்பாளர் மருதாசலம், சூலுார் அமைப்பாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, கோவையின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனு கொடுத்தனர்.
அதன் விபரம்:
n கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டின் ஒரு பகுதி மழை நிழல் மண்டலமாக மாறியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பருவமழையை பெருமளவில் இழக்கின்றன. இம்மண்டலத்தில் எந்த நீர்ப்பாசன திட்டமும் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் பல்வேறு மட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாற்றியமைக்கப்பட்ட பாண்டியாறு - மொய்யாறு திட்டம், கேரள அரசின் எந்த ஒப்புதலும் தேவைப்படாமல், 90 கோடி ரூபாய் வரை குறைந்த திட்டச் செலவில் செயல்படுத்தலாம் என, அனுபவமிக்க நீர்ப்பாசன நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
n கோவை மாவட்டத்தின் தெற்குப்பகுதி, விவசாயிகளுக்கு உதவும் வகையில் நல்லாறு பாசன திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
n கோவையில் 'சர்க்குலர் ரயில்' இயக்குவது மிகவும் எளிதானதாக இருக்கும். காய்கறி மற்றும் பால் போன்றவற்றை புறநகரில் இருந்து, நுகர்வு சந்தைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் விவசாயிகள் கொண்டு செல்வதற்கு, 'சர்க்குலர் ரயில்' சேவையை பயன்படுத்த முடியும். இத்திட்டத்தை தனியார் மூலம் செயல்படுத்தலாம் என பரிந்துரைக்கிறோம்.
n தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியிலும், கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பகுதியிலும் உள்ள விவசாயிகள், இடைப்பட்ட மலைப்பகுதிகள் வழியாக விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்ல அடிக்கடி போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேட்டுப்பாளையம் பண்ணாரி மற்றும் சாம்ராஜ் நகரை இணைக்க, சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
n விவசாயிகளால் மாட்டு வண்டிகளை பராமரித்து பயன்படுத்த முடிவதில்லை. விவசாய போக்குவரத்துக்காக, 75 முதல் 100 கி.மீ., க்குள் பயன்படுத்த இலகுரக மூன்று சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும். கிசான் கிரெடிட் கார்டு திட்டம், விவசாயிகளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. விவசாயிகள் மற்றும் பணியாளர்கள் பயன்பாட்டுக்காக, கிராமப்புறங்களில் ஏ.டி.எம்., நிறுவ வேண்டும்.
n தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 100 நாட்கள் வேலை தருவதால் விவசாய கூலிகள் கிடைப்பதில்லை. இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர, குறைந்தபட்சம் 200 நாட்கள் நேரடி பண்ணை வேலை செய்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை சேர்க்க வேண்டும். 200 நாட்கள் பண்ணை வேலை செய்த பின், 100 நாட்கள் வேலை உறுதியளிப்பு திட்ட வேலை வழங்கினால், ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு, 300 நாட்கள் வேலை கிடைக்கும். விவசாய கூலி வேலைக்கு ஆள் பற்றாக்குறை தீரும்.
n கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவள்ளூர், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் நீர், காற்று மற்றும் நிலம் மாசுபாடு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் அளித்த புகார்கள், பல சந்தர்ப்பங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவர்களது செயல்பாடுகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறியுள்ளனர்.

