sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

/

கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்


ADDED : மார் 26, 2024 01:41 AM

Google News

ADDED : மார் 26, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை லோக்சபா தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளர் மற்றும் போலீஸ் பார்வையாளர்களை, தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.

கோவை மற்றும் பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளுக்கு ஏற்கனவே செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தங்களது பணிகளை துவக்கி விட்டனர்.

வேட்பாளர்கள் செய்யும் செலவினங்களை எவ்வாறு கணக்கிட்டு, பட்டியலிட வேண்டுமென, தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கியுள்ளனர்.

தற்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு ஐ.ஏ. எஸ்., அந்தஸ்தில், ஒரு பொது பார்வையாளர் மற்றும் இரு தொகுதிகளுக்கு காவல்துறையில் இருந்து, ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் ஒரு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை லோக்சபா தொகுதிக்கு பொது பார்வையாளராக, வினோத் ராவ் (மொபைல் போன்: 99784 02959), பொள்ளாச்சி தொகுதிக்கு அனுராக் சவுத்ரி (மொபைல் போன்: 77460 14161) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி, நீலகிரி மற்றும் கோவை தொகுதிகளுக்கு சேர்த்து, ஐ.பி.எஸ்., அதிகாரி மனோஜ்குமார் (மொபைல் போன்: 94146 70824), பொள்ளாச்சி மற்றும் திண்டுக்கல் தொகுதிகளுக்கு சேர்த்து பிரதாப் கோபேந்திரா யாதவ் (மொபைல் போன்: 95595 28017) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் கோவை வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வர் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us