/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையில் கழிவு குவிப்பு: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
/
நீரோடையில் கழிவு குவிப்பு: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
நீரோடையில் கழிவு குவிப்பு: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
நீரோடையில் கழிவு குவிப்பு: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஏப் 14, 2024 09:32 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சூலக்கல் நீரோடையின் ஓரத்திலும், தண்ணீர் பரப்பிலும் உள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு, சூலக்கல் ஊராட்சியில் உள்ள நீரோடையில் தண்ணீர் உள்ளது. இந்த நீரோடையின் ஓரத்தில் குப்பையை மூட்டையாக வீசி செல்கின்றனர். மேலும், நீரோடையில் உள்ள தண்ணீரில் ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. இதனால் நீரோடை மாசடைகிறது.
மேலும், இந்த நீரோடை அருகில் தடுப்புகள் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதால், எளிதாக குப்பை கொட்டி செல்கின்றனர். பண்டிகை மற்றும் கோவில் திருவிழா நாட்களில் இப்பகுதியில் அதிகளவு கூட்ட நெரிசல் இருப்பதால், இந்த வழித்தடத்தில் அதிகப்படியானோர் வாகனங்களில் பயணித்து குப்பையை வீசி செல்கின்றனர். இதனால், பொதுச்சுகாதாரம் பாதிக்கிறது, நீரோடை பாழாகிறது.
நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நீரோடை அருகாமையில் தடுப்பு அமைக்கவும், ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

