/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கி மேலும் மூவர் காயம்
/
காட்டு யானை தாக்கி மேலும் மூவர் காயம்
ADDED : ஜூலை 29, 2024 11:25 PM
தொண்டாமுத்தூர்:விராலியூரில், ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்து, இருவர் படுகாயம் அடைந்த நிலையில், அதிகாலையில், அதே யானை தாக்கி, மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசீபுரம் அடுத்த விராலியூரில் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற பாஸ்கரன் என்பவரை காட்டு யானை தாக்கியது.
விரைந்து வந்த வனத்துறையினர் பாஸ்கரனை மீட்டு, சிகிச்சைக்காக மருத் துவமனைக்கு அனுப்பிவிட்டு, ஒற்றைக்காட்டு யானையை கிழக்கு நோக்கி விரட்டினர்.
இந்நிலையில், சிறிது நேரத்திலேயே, மேற்கு திசையில் இருந்து வந்த மற்றொரு காட்டு யானையை, வனத்துறையினர் விரட்டும்போது, கார்த்திக் மற்றும் ஹரீஷ் ஆகியோர், அதனை வீடியோ எடுத்துக் கொண்டு யானையின் பின்னால் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றபோது யானை திரும்பி வனத்துறையினரை நோக்கி வந்து தாக்கியதில், கார்த்திக் உயிரிழந்தார்.
ஹரீஷ் படுகாயம் அடைந்தார். அதன் பின் வனத்துறையினர் காட்டு யானையை விரட்டினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, வனப்பகுதியை ஒட்டி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை, வனத்துறையினர் விரட்டி கொண்டிருக்கும்போது, சாலையில் சென்று கொண்டிருந்த விராலியூரை சேர்ந்த வெள்ளையப்பன்,60, காளிச்சாமி,70, சுந்தரசாமி,56 ஆகிய மூவரையும், காட்டு யானை தாக்கியது.
இதில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில், காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்து, 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள், கலெக்டர் கிராந்திகுமாரிடம் மனு அளித்தனர்.

