/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி
/
கண்தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி
கண்தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி
கண்தானம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி
ADDED : மே 23, 2024 05:09 AM

உடுமலை, : வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, மாற்றுத்திறன் ஒரு தடை இல்லை என, பொதுநலப்பணியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், உடுமலையை சேர்ந்த சரவணக்குமார்.
உடுமலை ஒன்றியம் குருவப்பநாயக்கனுார் கிராமத்தில் வசிப்பவர் மாற்றுத்திறனாளி சரவணக்குமார், 41. ரேஷன் கடை பணியாளராகவும், பணி முடிந்தவுடன் மாலை நேரத்தில் ஆட்டோ ஓட்டுவது என அயராத உழைப்புடன், பொதுநலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை, நண்பர்களின் உதவியுடன் தொடர்ந்து வழங்கி வருகிறார். குருவப்பநாயக்கனுார் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு சிறப்புக்குழு அமைத்து, எந்த நாளில் எந்த பொருட்கள் வழங்கப்படுகிறது, எந்த வார்டு மக்களுக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவிடுகிறார். இப்பணிகளுடன் நிறுத்திவிடாமல், ரத்ததானம் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சரவணக்குமார் கூறுகையில், ''என்னுடைய நண்பர்கள் தான், இந்த பொதுநலப்பணியில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணம். கண்தானம், ரத்ததானம் செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநில அளவில் செய்வதற்கு முயற்சி செய்து வருகிறேன்,'' என்றார்.

