/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
/
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 11, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், காங்., நகர, வட்டார தலைவர்கள், மாவட்ட, மாநில நிர்வாகிகள் சார்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம், மாவட்ட காங்., கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட பார்வையாளர் சங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் சக்திவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிமணி, பாலு, காளீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நாளை, 12ம் தேதி எம்.பி., ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் 'எல் அண்டு டி' பைபாஸ் அருகில், செட்டிபாளையம் பகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பேசுகின்றனர். இதில், திரளாக பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

