/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடை விடுமுறையில் கத்துக்கிட்டது ஏராளம்!
/
கோடை விடுமுறையில் கத்துக்கிட்டது ஏராளம்!
ADDED : மே 21, 2024 12:56 AM

கோவை;'நிறைய விஷயம் கத்துக்க வாய்ப்பு கிடைச்சது... இத மத்தவங்களுக்கும் நான் எடுத்துட்டுப் போவேன்' என, ஒரு மாணவி சொன்னதும், மார்ட்டின்ஸ் டெய்சி அபார்ட்மென்டில் இருந்த மற்றவர்களுக்கும் தொற்றிக் கொண்டது உற்சாகம்.
கோடை விடுமுறையில், 'ரிலாக்ஸ்' ஆக இருக்க வேண்டும்; அதே சமயத்தில், உருப்படியான ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்விக்குழுமம் இணைந்து, 'கலையும் கைவண்ணமும்' என்ற நிகழ்ச்சி, அபார்ட்மென்ட்களில் நடத்தி வருகிறது.
மூன்றாவது நாளான நேற்று, ராமநாதபுரம் -- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள மார்ட்டின்ஸ் டெய்சி அபார்ட்மென்டில், பயிற்சி வழங்கப்பட்டது.
குழந்தைகள், மாணவியர், பெண்கள் என, 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, ஆப்ரிக்கன் ஓவியங்கள், கேரள சுவர் சித்திரங்கள், ஆபரண தயாரிப்பு பயிற்சி குறித்து, 'பெவிகிரில்' நிறுவனத்தின் ஓவிய வல்லுநர் வசந்தா பயிற்சியளித்தார்.
தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இன்றும், இதே அபார்ட்மென்ட்டில் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

